விமானம் ரத்தானதால் 51 வயது பெண்ணுக்கு அடித்த கோடீஸ்வர அதிர்ஷ்டம்! ஒரே நாளில் வாழ்க்கையே மாறி போன சம்பவம்
அமெரிக்காவில் விமானத்தை தவறவிட்ட பெண் இன்று மில்லியனராக மாறியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் Missouri-யில் இருக்கும் Kansas-ஐ சேர்ந்த Angela Caravella என்ற 51 வயது மதிக்கத்தக்க பெண் புளோரிடாவில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு திரும்புவதற்காக கடந்த மாதம் விமானத்திற்காக விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார்.
அப்போது திடீரென்று விமானம் ரத்து செய்யப்பட்டதால், அடுத்த விமானத்திற்காக காத்திருக்கும் நேரத்தில் அருகில் 1220 Kingsway சாலையில் இருக்கும் Publix store-ல் பொழுதை கழிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு லொட்டரி டிக்கெட் ஒன்றை சாதரணமாக வாங்கியுள்ளார்.
அதன் பின் அவரை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், தற்போது அவர் வாங்கிய அந்த லொட்டரி சீட்டிற்கு ஒரு மில்லியன் டொலர்(இலங்கை மதிப்பில் 19 கோடிக்கு மேல்) பரிசாக விழுந்துள்ளது.
இதைக் கேள்விப்பட்ட அவர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், விமான ரத்து ஆன பின், அடுத்த விமானம் வரும் வரை நேரத்தை கழிப்பதற்காக, அந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றேன்.
லொட்டரி டிக்கெட் வாங்கினேன். ஆனால் அதற்கு இவ்வளவு பெரிய பரிசு கிடைக்கும் என்று நான் நினைத்து பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.