தாயின் உடல் அடங்கிய சூட்கேசுடன் பொலிஸ் நிலையம் வந்த பெண்: அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில், பெண் ஒருவர் தன் தாயின் உடல் அடங்கிய சூட்கேசுடன் பொலிஸ் நிலையம் சென்ற விடயம் அதிர்ச்சியை உருவாக்கியது.
பல பிரச்சினைகளை சந்தித்துவந்த பெண்கள்
Sonali Sen (39) என்னும் அந்த பெண், தன் கணவர், ஆட்டிஸக் குறைபாடு கொண்ட தன் மகன், Biva Pal (71) என்னும் தன் தாய் மற்றும் தன் மாமியாருடன் ஒரே வீட்டில் வாழ்ந்துவந்துள்ளார்.
பல டல் நல பிரச்சினைகளைக் கொண்ட சோனாலியின் தாய்க்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடை சண்டை நடந்துகொண்டே இருந்திருக்கிறது.
Image: CEN
இப்படி உன் மாமியாரிடம் அவஸ்தை படுவதைவிட உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என அடிக்கடி தன் மகளிடம் கூறிவந்துள்ளார் பிவா.
தாயைக் கொன்று சூட்கேசில் அடைத்த பெண்
இந்நிலையில், தன் தாய்க்கு தூக்க மாத்திரைகளைக் கொடுத்து, பின் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெறித்துக் கொன்ற சோனாலி, அவரது உடலை ஒரு சூட்கேசில் அடைத்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்.
அத்துடன், தன் தாயைத் தான் கொன்றுவிட்டதாகவும் அவர் பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
Malaysia Latest News
தன் தாய் தன் மாமியாரால் படும் அவஸ்தையைக் கண்டு பொறுக்க இயலாத சோனாலி, ஏற்கனவே படும் மன அழுத்தத்தில் இருந்ததால் இப்படி ஒரு முடிவெடுத்தாரா என்பது போன்ற விடயங்களைத் தெரிந்துகொள்வதற்காக பொலிசார் சோனாலியிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |