தன் அழகான கைகளால் நாளொன்றிற்கு 3,000 டொலர்கள் வரை வருவாய் ஈட்டும் இளம்பெண்
உலகிலேயே அழகான கைகளைக் கொண்ட பெண் என தன்னை வர்ணிக்கும் இளம்பெண்ணொருவருக்கு, அவரது அழகான கைகள் நாளொன்றிற்கு 3,000 டொலர்கள் வரை சம்பாதித்துக் கொடுக்கின்றன.
அப்படி என்ன வேலை செய்கிறார் அவர்?
அதாவது, பல நாடுகளில் Hand Modeling என்றொரு விடயம் உள்ளது. அழகான கைகள் உடையவர்கள், தங்கள் அழகான கைகளை மட்டும் மொடலிங்குக்கு பயன்படுத்தி பணம் சம்பாதிக்கலாம்.

அவ்வகையில், நியூயார்க்கில் வாழும் அவிஷா தேவானி (Avisha Tewani, 35) என்னும் பெண், தன் கைகளை மொடலிங்குக்கு பயன்படுத்தி நாளொன்றிற்கு 300 முதல் 3,000 டொலர்கள் வரை சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் சிறிய விளம்பர நிறுவனங்களுக்காக மொடலிங் செய்த அவிஷா, தற்போது கொக்கோ கோலா, ஸ்டார்பக்ஸ், கைலீ காஸ்மெட்டிக்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் மொடலிங் செய்கிறார்.
விடயம் என்னவென்றால், அவரது கைகள்தான் அவரது முதலீடு என்பதால், அவர் தன் கைகளை பத்திரமாக கவனித்துக்கொள்ளவேண்டும்.

ஆகவே, வீட்டில் பாத்திரம் துலக்கும்போது கூட பாதுகாப்பான கையுறைகள் அணிந்துகொள்கிறாராம் அவிஷா.
அத்துடன், அவருக்கு பாக்ஸிங் என்றால் மிகவும் பிடிக்குமாம். ஆனால், தன் வேலைக்காக பாக்ஸிங்கையும், ஏன் சைக்கிள் ஓட்டுவதைகூட விட்டுவிட்டாராம் அவிஷா!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |