பயிற்சி இல்லாமல் 3-வது முயற்சியில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., ஆனால் IAS அதிகாரியாகவில்லை
பயிற்சி இல்லாமல் கடின உழைப்பின் மூலம் 3-வது முயற்சியில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்ணை பற்றி பார்க்கலாம்.
யார் இவர்?
UPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது பலருக்கு ஒரு கனவு. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அது நிஜமாகிறது. இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றாக அறியப்படும் இந்த தேர்வுக்கு புத்திசாலித்தனம், மன வலிமை மற்றும் பல வருட அர்ப்பணிப்பு தேவை.
அந்தவகையில், தோல்விகளை சந்தித்து ஐபிஎஸ் அதிகாரியாக மாறிய ஆஷ்னா சவுத்ரியின் வெற்றிக் கதையை பற்றி பார்க்கலாம்.
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், ஹபூர் மாவட்டத்தில் உள்ள பில்குவா என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவர் ஆஷ்னா சவுத்ரி.
இவர், 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் 96.5% மதிப்பெண் பெற்று கல்வியில் சிறந்து விளங்கினார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
அதைத் தொடர்ந்து தெற்காசிய பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், அரசு சாரா நிறுவனத்திலும் பணியாற்றினார்.
கடந்த 2019-ம் ஆண்டில் தனது குடும்பத்தினரால் ஈர்க்கப்பட்டு ஆஷ்னாவின் UPSC பயணம் தொடங்கியது. இருப்பினும், தனது முதல் இரண்டு முயற்சிகளில் தோல்வியடைந்து பின்னடைவுகளைச் சந்தித்தார்.
பின்னர் தனது தவறுகளை கண்டுபிடித்து அதற்கான வழிகளை தேர்ந்தெடுத்து மாதிரித் தேர்வுகளில் பயிற்சி செய்தார்.
இதையடுத்து, 2022 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது முயற்சியில் தேர்வில் தேர்ச்சி பெற்று, அகில இந்திய அளவில் 116 வது இடத்தைப் பிடித்தார்.
இவர் ஐ.ஏ.எஸ்-க்கு தகுதி பெற்றிருந்தாலும் காவல் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் ஐ.பி.எஸ்-யை தேர்ந்தெடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |