குடிபோதையில் சூப்பர் மார்கெட்டுக்குள்.. இளம்பெண் செய்த காரியம்! தெறித்து ஓடிய மக்கள்
அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் குடிபோதையில் செய்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பரவல் இன்றுவரை குறைந்தபாடில்லை. குறிப்பாக அமெரிக்காவில் கொத்து கொத்தாக மக்கள் நோயால் இறக்கும் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டது. கொரோனா 2ஆம் அலை காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது வரை ஒரு சில இடத்தில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஊரடங்குக்கு பிறகு பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 37வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் திடீரென்று சூப்பர் மார்க்கெட்க்குள் நுழைந்து தனக்கு கொரோனா இருப்பதாகவும் தற்போது உங்களுக்கும் பரவ போகிறது என்று கூறி பலமாக இருமியுள்ளார். இதோடு அங்கிருந்த உணவுகள் மீது எச்சில் துப்பியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியே சென்றுள்ளனர்.
பின்னர் அந்த பெண்ணை காவலர்கள் பிடித்து கொரோனா பரிசோதனை செய்து பார்த்ததில் அந்த பெண்ணுக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த பெண் மீது காவலர்கள் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் அந்த பெண்ணிற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதோடு சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கு $30,000 நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.