19வது மாடியில் தலைகீழாக தொங்கிய மூதாட்டி! பின்னர் நடந்தது என்ன? வைரல் வீடியோ
19வது மாடியில் தலைகீழாக தொங்கிய 83 வயதான பாட்டியை தீயணைப்பு துறையினர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சீனாவின் ஜியாங்கு மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் 83 வயது மூதாட்டி. இவர் 19 மாடியில் துணி எடுக்க செல்லும் போது கால் தவறி துணிப்போடும் ரேக்கில் மாட்டி கொண்டு தலைகீழாக தொங்கியுள்ளார்.
இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அந்தப் பெண்மணியை நீண்ட போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்டனர்.
An 82-year-old woman was seen dangling upside down from a clothes rack after falling from the 19th floor of a building in eastern China’s Jiangsu province. pic.twitter.com/Y4yvFRNBo8
— South China Morning Post (@SCMPNews) November 23, 2021
நல்ல வேளையாக இதில் பெண்மணிக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.