பிரித்தானியாவில் 2 குழந்தைகள் உயிரிழப்பு: கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு மனநல காவல்
பிரித்தானியாவின் ஸ்டாஃபோர்டு நகரில் 2 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணை மனநல காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
2 குழந்தைகள் உயிரிழப்பு
பிரித்தானியாவின் ஸ்டாஃபோர்ட்(Stafford) நகரில் உள்ள வீட்டில் மெராஜ் உல் சஹ்ரா(2) மற்றும் அப்துல் மோமின் அல்ஃபாதிஹ்(3) என்ற இரண்டு குழந்தைகள் சடலமாக கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து 43 வயதுடைய பெண் ஒருவர் கொலை குற்றச்சாட்டு சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவைகள் உயிரிழந்த 2 குழந்தைகளை கண்டெடுத்தனர்.
மனநல காவலில் வைக்க உத்தரவு
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், ஸ்டாஃபோர்ட் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், கைது செய்யப்பட்ட 43 வயது பெண் மனநலச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்த குழந்தைகளுக்கு உறவினர் என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால், உயிரிழந்த குழந்தைகளுடன் கைது செய்யப்பட்ட பெண் எந்த வகையிலான உறவு என்பதை பொலிஸார் வெளியிடவில்லை.
அத்துடன் சம்பவ நடந்த கார்ப்பரேஷன் தெருவில் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |