கணவனின் முகத்தை கடைசியாக கூட பார்க்கவிடாமல் துரத்திய மாமியார்! மருமகள் எடுத்த விபரீத முடிவு
இந்தியாவில் கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசம் மாவட்டத்தில் உள்ள ஏட்டா மாவட்டத்தை சேர்ந்தவரான அரவிந்த் சிங்(24) இந்திய ராணுவத்தில் பணி புரிந்து வந்தார். இவருக்கு ஆர்த்தி(24) என்ற பெண்ணுடன் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இருவரும் திருமணம் நடந்து முடிந்து ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். அதன் பிறகு புகுந்த வீட்டில் ஏற்பட்ட சண்டையால் தனது தாய் வீட்டிற்கு ஆர்த்தி சென்றுவிட்டார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 8-ஆம் திகதி காஷ்மீரில் உள்ள கணவர் அரவிந்த் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி ஆர்த்திக்கு தொலைபேசி மூலம் தெரியவந்துள்ளது.
இதனால் மிகவும் மனமுடைந்த ஆர்த்தி கணவனின் முகத்தை கடைசியாக பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவரது மாமியார் கணவரின் முகத்தை பார்க்கவிடாமல் தடுத்து ஊர் மக்களின் முன்னரே தகாத வார்த்தைகளால் திட்டி அசிங்கப்படுத்தியுள்ளார்.
இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான ஆர்த்தி அவரது வீட்டிற்கு சென்று படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.