திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு மாயமான பெண்: விலங்குகள் ஆய்வகத்தில் கண்ட அதிரவைக்கும் காட்சி
அமெரிக்காவில் இளம் மருத்துவ மாணவி ஒருவர் தமது திருமணத்திற்கு சில நாட்கள் முன்னர் திடீரென்று மாயமான நிலையில், விலங்குகள் ஆய்வகத்தை சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
விலங்குகள் ஆய்வலகத்தில்
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் அமைந்துள்ள யேல் பல்கலைக்கழகத்தின் விலங்குகள் ஆய்வலகத்தில் Annie Le நுழைவதை கண்காணிப்பு கமெரா பதிவுகளில் இருந்து அதிகாரிகள் உறுதி செய்தனர்.
கடந்த 2009 செப்டம்பர் 8ம் திகதி குறித்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அதன் பின்னர் அவர் அந்த ஆய்வகத்தில் இருந்து வெளியேறியதாக கமெராவில் பதிவாகவில்லை. Annie Le உடன் தங்கியிருந்தவர்கள் அன்று மாலையே அவர் மாயமாகியுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், Annie Le திட்டமிட்டே மாயமாகியிருக்கலாம் என்றும், அவருக்கு அதற்கான காரணம் உள்ளது என்றும் அதிகாரிகள் தரப்பு கண்டறிந்தது. மருத்துவ மாணவி என்பதால், கல்வி தொடர்பில் கடும் அழுத்தங்களை எதிர்கொண்டு வந்துள்ளார்.
இதனாலையே, ஒரு சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்திருக்கலாம் என்றும் பொலிசார் கருதினர். இந்த நிலையில், விசாரணையின் ஒருபகுதியாக கண்காணிப்பு கமெரா காட்சிகளை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அதில் விலங்குகள் ஆய்வகம் சென்ற 24 வயது Annie Le அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறும் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனைகள் எதுவும் அதிகாரிகளுக்கு பலனளிக்கவில்லை.
கொடூர துஸ்பிரயோகத்திற்கு இரை
ஆனால் செப்டம்பர் 12ம் திகதி கிழிக்கப்பட்ட, ரத்தக்கறை படிந்த உடை ஒன்றை பொலிசார் கண்டெடுத்தனர். இதனையடுத்து நடந்த தீவிர தேடுதல் நடவடிக்கையில், பாதி நிர்வாண கோலத்தில் அந்த விலங்குகள் ஆய்வகத்தின் ஒரு அறையின் சுவற்றில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
அன்று அவரது திருமணம் நடக்கவிருந்த நாள் என்றே கூறப்படுகிறது. அவரது உடல் மிகவும் மோசமாக சேதப்படுத்தப்பட்டிருந்தது. அவர் ஒரு அறுவை சிகிச்சை கையுறை அணிந்திருந்தார். மட்டுமின்றி, கொலை செய்யப்படுவதற்கு முன்னர் Annie Le கொடூர துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கப்பட்டிருந்தார்.
அடையாள அட்டை ஏதுமின்றி எவரும் பல்கலைக்கழகத்தின் குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல முடியாது என அறிந்துகொண்ட விசாரணை அதிகாரிகள், மிக விரைவிலேயே ஆய்வ உதவியாளர் ரேமண்ட் கிளார்க் என்பவரை சந்தேக நபராக அடையாளம் கண்டனர்.
அத்துடன் அவரை தீவிரமாக விசாரித்ததில் கொலையை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மீதான விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. எதிர்வரும் 2053 செப்டம்பர் 16ம் திகதி ரேமண்ட் கிளார்க் தண்டனை முடித்து விடுதலையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |