முதல் மனைவியை காப்பாற்ற... இரண்டாவது மனைவி செய்த நெகிழ்ச்சி செயல்! நெஞ்சை உருக வைக்கும் பின்னணி
அமெரிக்காவில் முதல் மனைவியை காப்பாற்ற இரண்டாவது மனைவி, தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை கொடுத்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த தம்பதி ஜிம்-மைலன் மெர்தே. ஜிம் தன்னுடைய மனைவியான மைலனை பல ஆண்டுகளுக்கு முன்பு விவகாரத்து செய்துள்ளார்.
இருப்பினும், குழந்தைகள் நலனைக் கருத்தில் கொண்டு இருவருமே, நண்பர்களாக தொடர்ந்து இருந்து வந்துள்ளனர். இது போன்ற சூழ்நிலையில், ஜிம்க்கு, டெப்பி என்ற பெண்ணின் நட்பு கிடைத்துள்ளது.
இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், ஜிம், முதல் மனைவி மைலன் மற்றும் டெப்பி ஆகியோர் நண்பர்களாகவே இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், முதல் மனைவியான மைலன், கடந்த சில ஆண்டுகளாகவே சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரின் சிறுநீரகத்தின் செயல்பாடு 8 சதவீதத்திற்கு குறைவாக, மருத்துவர்கள் நிச்சயம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையென்றால், அவரின் உயிரைக் காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் மைலனின் சகோதரர் தன்னுடைய சிறுநீரகத்தில் ஒன்றை கொடுக்க முன் வந்துள்ளார். ஆனால், அது மைலனின் சிறுநீரகத்தோடு ஒத்து போகவில்லை. அப்போது தான் டெப்பி தான் சிறுநீரகம் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது சிறுநீரகம், மைலனோடு ஒத்துப் போனதால், அறுவை சிகிச்சைக்கான நாளும் ஒதுக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் நல்லபடியாக நடந்தது.
இதுகுறித்து கூறிய டெப்பி கூறுகையில், இதற்கு முன் ஒருமுறை எனது சகோதரர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு இரட்டை நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது.
அப்போது மைலன் தனது நுரையீரலை தர முன்வந்தார். ஆனால் அவரின் நுரையீரல் டெப்பியின் சகோதரரின் நுரையீரலுடன் பொருந்தவில்லை. தற்போது மைலனுக்கு என்னுடைய சிறுநீரகம் பொருந்தியுள்ளது.
இதை செய்வது என்னுடைய கடமை. மேலும் தனது திருமண நாளும், எனக்கு அறுவை சிகிச்சை நடந்த நாளும் எனது வாழ்நாளின் மிகச்சிறந்த நாட்கள் என கூறியுள்ளார்.