நடு ரோட்டில் காரில் மாட்டியபடி இழுத்து செல்லப்பட்ட பெண்! சிசிடிவியில் சிக்கிய பதறவைக்கும் காட்சி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு தெருவில், ஒரு பெண் காரின் பக்கவாட்டில் தொங்கியபடி சாலையில் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
Oakland பகுதியில் International Boulevard மற்றும் 9th Avenueவில் உள்ள ஒரு அழகுப் பொருட்கள் விற்பனையகத்திலிருந்து வெளியே வந்த பெண்னிடம், அவருக்கு பின்னால் ஒரு வெள்ளை நிரக் காரில் வந்த ஒரு திருட்டு கும்பல் பணப்பையை பறித்துள்ளது.
தனது பையை இறுக்கமாக தனது கையில் பிடித்துக்கொண்ட அந்தப் பெண்ணையும் திருடர்கள் தரதரவென ரோட்டில் இழுத்துச் சென்றுள்ளனர்.
எப்படியாவது பணப்பையை மீட்டுவிட நினைத்து வேகமாக சென்ற காரை பிடித்தபடி குறைந்தது 100 மீட்டருக்கு தொங்கியபடி சென்றுள்ளார். காருக்குள் இருந்த ஒரு திருடன் அப்பெண்ணை தள்ளிவிட, அவர் பிரண்டு கீழே விழுந்துள்ளார்.
Woman dragged by car about 100 feet near 9th & International after having her purse snatched. @oaklandpoliceca investigating pic.twitter.com/jSsw0VQieH
— Henry K. Lee (@henrykleeKTVU) February 26, 2021
அவருக்கு பெரிதாக காயம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் பணப்பையை எடுத்துக்கொண்டு அந்தக் கார் வேகமாக பறந்தது.
சில நொடிகளுக்கு செய்வதறியாது திகைத்த அப்பெண் சாலையில் நடுவில் ஆபத்தான நிலையில் விழுந்து கிடந்தார், பின் சாலையின் ஓரத்திற்கு எழுந்து நடந்துவந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 24-ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் அருகிலுள்ள கடையிலிருந்து கிடைத்துள்ளது.
இந்நிலையில் Oakland இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.