GPS-ஐ நம்பி ஆபத்தில் சிக்கிய மூதாட்டி: ரயில் பாதையில் கார் ஓட்டியதால் பரபரப்பு
அமெரிக்காவில் 70 வயது மூதாட்டி ஒருவர் GPS காட்டிய வழியை பின்பற்றி சென்று ரயில் பாதையில் சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
GPS-ஐ நம்பி ஆபத்தில் சிக்கிய மூதாட்டி
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ஜூன் 2ம் திகதி மாலை 6.20 மணிக்கு Utah மாநில பதிவு எண் கொண்ட Mazda CX-5 ரக காரை 70 வயது மூதாட்டி ஓட்டி வந்துள்ளார்.
மூதாட்டி GPS காட்டிய வழியை கண்மூடித்தனமாக நம்பி சியாட்டிலின் மவுண்ட் பேக்கர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள உயர்த்தப்பட்ட ரயில் பாதையில் காரை ஏற்றியுள்ளார்.

கிட்டத்தட்ட கால் மைல் தூரல் ரயில் பாதையிலேயே வண்டியை செலுத்திய அவர், இறுதியில் அதிலிருந்து வெளியேற முடியாமல் தண்டவாளத்திலேயே சிக்கிக் கொண்டார்.
இதனை தொடர்ந்து சவுண்ட் டிரான்சிட் அதிகாரிகள் ரயில் பாதையில் செல்லக்கூடிய மின்சாரத்தை துண்டித்து மிகுந்த சிரமத்திற்கு பிறகு காரை மீட்டனர்.
இதனால் அந்த நகரின் 1 லைன் ரயில் போக்குவரத்து கிட்டத்தட்ட 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
மூதாட்டியிடம் விசாரணை
70 வயது மூதாட்டி ரயில் பாதையில் எப்படி நுழைந்தார் என்பது தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த சம்பவத்தின் போது மூதாட்டி மதுபோதையில் இல்லை என்றும், ஆனால் அவர் மிகுந்த குழப்பத்தில் இருந்ததாகவும் காவல்துறை அதிகாரி பேட்ரிக் மிக்காட் தகவல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மூதாட்டின் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா என்பது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |