விமானத்தில் கட்டப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்ட பெண் பயணி! என்ன காரணம்? வைரலாகும் புகைப்படங்கள்
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஒன்றில் இளம் பெண் ஒருவர் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், அதன் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 6-ஆம் திகதி அமெரிக்காவின் Dallas-ல் இருந்து Charlotte-க்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு செஒந்தமான விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அந்த விமானத்தில் இருந்த பெண் ஒருவர் திடீரென்று விமானத்தின் கதவை திறக்க முயன்றுள்ளார். இதனால் விமான ஊழியர்கள் அவரை தடுக்க முயன்ற போது, உடல்ரீதியாக தாக்கப்பட்டுள்ளார்.
இதில் குறித்த பெண் மற்றும் விமான ஊழியர்களும் காயமடைந்துள்ளனர். அதன் பின்னும் அவர் தொடர்ந்து அடம்பிடித்ததால், அவரை வேறு வழியின்றி விமானத்தின் இருக்கையில், உட்கார வைத்து கட்டி வைத்துள்ளனர்.
இது குறித்து விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இது அதிகாலை 1.30 மணியளவில் இருந்தது, விமான பணிப்பெண்கள் அங்கும், இங்கும் ஓடுவதை கண்டோம்.
ஆனால், அவர்கள் எதுவும் சொல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடந்த ஜூலை 6-ஆம் திகதி Dallas-ல் இருந்து Charlotte-க்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது, ஒரு பெண் பயணி விமானத்தின் கதவைத் திறக்க முயன்றதைத் தொடர்ந்து, அவர் தடுக்கப்பட்டார்.
மற்ற பயணிகள் மற்றும் எங்கள் விமான குழுவினரின் பாதுகாப்பிற்காக, அவர் விமானம் தரையிறங்கும் வரை, தனியாக கட்டுப்படுத்தப்பட்டார். அதன் பின் விமானம் தரையிரங்கிய பின் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறினார்.