இந்தியாவில் புடவை விற்று ரூ.56 கோடி சாம்பாதித்த சகோதரிகள் - எப்படி தெரியுமா?
இரு சகோதரிகள் ரூ. 6 லட்ச முதலீட்டில் புடவை வியாபராம் செய்யும் நிறுவனத்தை தொடங்கி, 17000 பேருக்கு மேல் வேலை செய்யும் மிகப்பெரிய நிறுவனமாக மாற்றி தற்போது ரூ.56 கோடி வரை சம்பாதித்துள்ளனர்.
புடவை விற்று சாம்பாதித்த சகோதரிகள்
பொதுவாகவே பெண்களுக்கு புடவை மீது உள்ள மோகம் எப்போதும் குறைவது இல்லை. குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் புடவை மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதை இரு சகோதரிகள் ஒரு வியாபாரமாக மாற்றியுள்ளனர். தனியா பிஸ்வாஸ் மற்றும் சுஜாதா பிஸ்வாஸ் இருவரும் இணைந்து சிறிய அளவில் புடவை வியாபாரத்தை ஆரம்பித்துள்ளனர்.
இவர்களிடன் மாத்திரம் சுமார் 40- 45 சதவீதம் வாடிக்கையாளர்கள் திரும்ப திரும்ப இவர்களுடைய நிறுவனத்தில் இருந்து புடவை வாங்குகிறார்களாம்.
இவர்களின் இந்த தொழிலானது மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இதை 2016 ஆம் ஆண்டில் சூதா (Suta) என்ற பெயருடன் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இவர்கள் புகழ்பெற்ற மென்மையான மல்மல் காட்டன் புடவைகளை விற்பனை செய்கிறார்கள். இந்த புடவையானது வீட்டில் இருக்கும் பெண்களும் அதிகமாக அணியக்கூடிய ஒரு ஆடையாகும்.
எனவே இவர்களின் சொந்த டிசைனிலும் தயாரித்து விற்பனை செய்தனர். இது ஆரம்பம் முதல் அதிகப்படியான வரவேற்பும், விற்பனையும் பெற்றுள்ளது.
Suta பிராண்ட்-ஐ உருவாக்குவதற்கு முன்பு பல தொழில்களை செய்து பெரும் தோல்வியை சந்தித்தனர். அதன்பின்பு தான் புடவைகளை வடிவமைக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்நிறுவனத்திற்காக இருவரும் ரூ.3 லட்சம் முதலீடு செய்துள்ளனர். ஒரு புடவையின் விலை .2,800 முதல் ரூ.3,000 வரை உள்ளது. இந்த விற்பனை விலையில் நெசவாளர்களுக்கு 30-40 சதவீதம் வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு நெசவு தொழில் செய்வது மேற்கு வங்காளத்தின் சாந்திபூரில் உள்ள ஒரு நெசவாளர் கணவன் மற்றும் மனைவி ஜோடியாகும்.
இவர்களின் கடந்த வருட வருவாய் மாத்திரம் சுமார் 56 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இந்நிலையில் இவரகள் இனி வரும் காலங்களில் ரூ. 56 கோடிக்கு மேல் சம்பாதிக்க இருப்பதாகவும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |