உதவி கேட்டு அலறல் சத்தம்..சில மணிநேரத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்
அவுஸ்திரேலியாவில் மலைப்பகுதியில் உதவி கேட்டு அலறிய பெண் சடலமாக மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியது.
டிப்ரோகர்கன் மலை
அவுஸ்திரேலியாவின் சன்ஷைன் கோஸ்டில் டிப்ரோகர்கன் என்ற மலை அமைந்துள்ளது. இது பிரிஸ்பேனுக்கு வடக்கே சுமார் 70 கிலோ மீற்றர் தொலைவில் கிளாஸ் ஹவுஸ் மலைத்தொடரில் உள்ளது.
இது அவுஸ்திரேலியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் மலையேறுபவர்கள் மற்றும் காட்டுப் பயணிகளுக்கு ஒரு பிரபலமான இடமாகும்.
இங்கு வியாழக்கிழமை காலை சுமார் 8.40 மணியளவில், பெண்ணொருவர் உதவி கேட்டு அலறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் டிப்ரோகர்கன் மலையின் அடிவாரத்திற்கு வரவழைக்கப்பட்டனர். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு, சுமார் 10.30 மணியளவில் உதவி கேட்டு அலறியதாக சந்தேகிக்கப்பட்ட பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
கடந்த மாதம் இருவர் மரணம்
பின்னர் அப்பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அறிக்கை வந்த பின்னர் அடுத்தக்கட்ட விசாரணை தொடங்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த மார்ச் 15ஆம் திகதி அன்று, பீர்வா மலையில் நடந்த மலையேற்ற விபத்தில் இரண்டு பதின்ம வயது இளைஞர்கள் உயிரிழந்த சில வாரங்களுக்குப் பிறகு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அவர்கள் பிரிஸ்பேனைச் சேர்ந்த லோரியல் ஜார்ஜினா என்ற 18 வயது பெண் என்றும், ஜாக் தாட்சர் (18) என்ற இளைஞர் என்றும் பின்னர் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |