முகம் சுழிக்க வைக்கும் தொழில் என கண்டித்த தாயார்... பல நூறு கோடிகளுக்கு வாங்கிய முகேஷ் அம்பானி
பெண்களுக்கான உள்ளாடைகளை விற்பனை செய்யும் Zivame நிறுவனத்தின் நிறுவனர் ரிச்சா பல்வேறு தடைகளையும் சவால்களையும் எதிர்கொண்டே இன்றைய நிலையை எட்டியுள்ளார்.
பெண்களுக்கான உள்ளாடைகள்
தொழில்துறையில் களமிறங்க முடிவு செய்த ரிச்சா கர், பெண்களுக்கான உள்ளாடைகள் மட்டும் தனியாக, பிரத்தியேகமாக விற்பனை செய்ய வேண்டும் என திட்டமிட்டார். இதன் அடிப்படையில் Zivame என்ற உள்ளாடை நிறுவனத்தை அவர் உருவாக்கினார்.
இன்று அவரது நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 764 கோடி, மட்டுமின்றி, அந்த நிறுவனத்தை தற்போது முகேஷ் அம்பானி வாங்கியிருந்தாலும், அதன் முதன்மை அதிகாரிகள் பொறுப்பில் ரிச்சா கர் நீடித்து வருகிறார்.
ரிச்சாவின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது ரூ 749 கோடி என்றே தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த நிலையை எட்டியுள்ள ரிச்சாவின் பயணம் சாதாரணமாகவும் எளிதாகவும் இருக்கவில்லை.
பொதுவாக தொழில்துறையில் களமிறங்க முடிவெடுக்கும் பெண் ஒருவருக்கு குடும்பத்தினர் ஆதரவளிப்பார்கள். ஆனால் ரிச்சாவின் முடிவு அவரது குடும்பத்தினரிடம் இருந்து கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. குறிப்பாக ரிச்சாவின் தாயார் முகம் சுழிக்க வைக்கும் தொழில் என கண்டித்தார்.
நண்பர்கள் கூட ரிச்சாவின் முடிவை கேலி செய்தனர். ஆனால் காலப்போக்கில் ரிச்சாவின் தாயார் தமது மகளின் முடிவை ஆதரித்தார். ஜாம்ஷெட்பூர் நகரில் 1980ல் பிறந்த ரிச்சா BITS Pilani-ல் முதுகலை பட்டம் பெற்றார். அத்துடன் SAP மற்றும் Spencer's ஆகிய நிறுவனங்களில் பணியாற்றி தொழில்முறை அனுபவத்தைப் பெற்றார்.
பெண்கள் மத்தியில்
தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து ரூ 35 லட்சம் கடனாக வாங்கி தொழிலில் களமிறங்கினார். ஆனால் போதிய முதலீடு இல்லை என்பதை புரிந்துகொண்ட ரிச்சா, இணையமூடாக இந்தியாவின் மிகப் பெரிய உள்ளாடைகள் கடையை திறந்தார்.
அத்துடன் பெண்கள் பலருக்கு, அவர்களுக்கு பிடித்தமான உள்ளாடைகளை இணையத்தில் வாங்குவதால் ஏற்படும் நன்மைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார். இதனையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக Zivame பெண்கள் மத்தியில் கவனம் பெற தொடங்கியது.
மட்டுமின்றி, Zivame நிறுவனம் 5,000 வடிவங்களில், 50 பிராண்டுகள் மற்றும் 100 வகையான அளவுகளை வழங்குகிறது. 2011ல் இந்தியாவின் 2ம் நிலை மற்றும் 3ம் நிலை நகரங்களில் கடைகளை திறக்கவும் முடிவு செய்தார்.
2020ல் முகேஷ் அம்பானி Zivame நிறுவனத்தின் பங்கை வாங்கினார். இருப்பினும் ரிச்சா தனது சமபங்குகளை நிறுவனத்தில் தக்க வைத்துக் கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |