பிரசவ வலியில் துடித்த இளம்பெண்! திடீரென கழிப்பறையில் விழுந்த குழந்தை.. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்
மலேஷியாவில் பெண் ஒருவருக்கு கழிப்பறையில் பிரசவலி ஏற்பட்டு குழந்தை பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேஷியா சிலாங்கூர் நகரில் உள்ள பிரபல உணவகத்தில் மதிய உணவு சாப்பிடுவதற்காக இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அந்த பெண் கழிவறைக்கு சென்ற பொது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அந்த பெண் எதுவும் புரியாமல் வழியில் துடித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கழிப்பறை பேசினிற்குள் குழந்தை விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறியுள்ளார்.
இவர் சத்தத்தை கேட்டு உணவக ஊழியர்கள் அவசர உதவிக்கு அழைத்துள்ளனர். மீட்பு துறையினர் கழிப்பறையின் கதவை உடைத்து உள்ளே சென்று குழந்தையை காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் குழந்தை சம்பவ இடத்திலே உயிரிழந்தது. இதையடுத்து அந்த பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிலாங்கூர் தீயணைப்பு துறை இயக்குனர் கூறியதாவது, அந்த பெண் ஏழு
மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணிற்கு அவர் கர்ப்பமாக இருந்தது தெரியாது என்று கூறியுள்ளார்