30,000 அடி உயரத்தில் நடுவானில் குழந்தை பெற்றெடுத்த பெண்: குழந்தை எந்த நாட்டுக் குடிமகள்?
நிகராகுவா நாட்டுப் பெண் ஒருவருக்கு, விமானத்தில் பயணித்துக்கொண்டிருக்கும்போது பிரசவ வலி ஏற்பட்டது. அவர் 30,000 அடி உயரத்தில் நடுவானில் குழந்தை பெற்றெடுத்த நிலையில், அந்த குழந்தைக்கு எந்த நாட்டுக் குடியுரிமை கிடைக்கும் என கேள்வி எழுந்துள்ளது.
30,000 அடி உயரத்தில் நடுவானில் குழந்தை பெற்றெடுத்த பெண்
நிகராகுவா நாட்டிலுள்ள Managua என்ற இடத்திலிருந்து அமெரிக்காவிலுள்ள மியாமி நோக்கி பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்று, மெக்சிகோவுக்கு மேலாக பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
அவர் 30,000 அடி உயரத்தில் நடுவானில் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்.
Image: TikTok/@roxymairenasolis
அதைத் தொடர்ந்து, விமானி உடனடியாக விமானத்தை மெக்சிகோவிலுள்ள Cancun என்ற விமான நிலையத்தில் தரையிறக்கினார்.
மருத்துவ உதவிக் குழுவினர் விமானத்தில் ஏறி அந்தப் பெண்ணையும் குழந்தையும் பத்திரமாக இறக்கிச் செல்ல, பயணிகள் வாழ்த்துக் கூறி அந்தப் பெண்ணை வழி அனுப்பிவைத்தார்கள்.
Image: TikTok/@roxymairenasolis
குழந்தை எந்த நாட்டுக் குடிமகள்?
இதற்கிடையில், நடுவானில் பிறந்த அந்தக் குழந்தைக்கு எந்த நாட்டுக் குடியுரிமை கிடைக்கும் என கேள்வி எழுந்துள்ளது.
Image: TikTok/@roxymairenasolis
மெக்சிகோ வான் பரப்பில் பயணிக்கும்போது பிறந்ததாலும், விமானம் மெக்சிகோ நாட்டில் தரையிறங்கியதாலும், அந்தக் குழந்தை மெக்சிகோ குடியுரிமை பெறத் தகுதியுடையவள் ஆகிறாள் என்கின்றன ஊடகங்கள்.
Image: TikTok/@roxymairenasolis