தங்கையின் பிறந்தநாளை மறந்த அண்ணன் கொடுத்த பரிசு: காத்திருந்த எதிர்பாராத ஆச்சரியம்
அமெரிக்காவில் தன் தங்கையின் பிறந்தநாளை மறந்த அண்ணன், அவருக்கு பரிசாக ஒரு லொட்டரிச் சீட்டை வழங்கினார். ஆனால், அது தன் தங்கையை கோடீஸ்வரியாக்கும் என அவர் கனவிலும் நினைக்கவில்லை.
Elizabeth Coker-Nnamக்கு சென்ற மாதம் பிறந்தநாள். தாமதாகவே அவருக்கு ஒரு லொட்டரி டிக்கெட்டை பரிசாக வழங்கினார் அவரது அண்ணன். அதை Elizabeth சுத்தமாக மறந்துபோன நிலையில், பல வாரங்களுக்குப் பின் ஒரு நாள் அண்ணனும் தங்கையும் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த லொட்டரி டிக்கெட் என்ன ஆயிற்று என்று கேட்டிருக்கிறார் அண்ணன்.
அதை தான் மறந்தே போனதாக கூறிய Elizabeth, உடனே அதை எடுத்து சோதித்திருக்கிறார். அப்போது அவர் எதிர்பாராத ஒரு ஆச்சரியம் அவருக்கு காத்திருந்திருக்கிறது.
ஆம், Elizabethக்கு அந்த லொட்டரியில் முதல் பரிசு விழுந்திருப்பது தெரியவந்தது. 500,000 டொலர்கள் பரிசு பெற்று, ஒரே நாளில் கோடீஸ்வரியாகிவிட்டார் Elizabeth.
அண்ணனும் தங்கையும், தொலைபேசியிலேயே கத்திக் கூச்சலிட்டு தங்கள் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அடடா, இது தெரிந்திருந்தால் அந்த டிக்கெட்டை நானே வைத்திருந்திருப்பேனே என்கிறார் அவரது அண்ணன் வேடிக்கையாக. அண்ணனிடம், கவலைப்படாதீர்கள், உங்கள் பிறந்தநாளுக்கு மறக்க முடியாத ஒரு பரிசு தருகிறேன் என்கிறார் Elizabeth சிரித்துக்கொண்டே!