ஓரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இந்திய பெண்
இந்திய மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஓரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, சதாரா மாவட்ட மருத்துவமனையில் 30 வயது பெண்ணான காஜல் விகாஸ் ககுர்தியா என்பவர் தனது மூன்றாவது பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
ஏற்கனவே இவர் முதல் கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகளையும், இரண்டாவது கர்ப்பத்தில் ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார் . இதன் மூலம் தற்போது அவருக்கு மொத்தம் ஏழு குழந்தைகள் பிறந்துள்ளன.
கூலித் தொழிலாளியான அந்தப் பெண், 34 வார கர்ப்பிணியாகவும், குஜராத்தைச் சேர்ந்தவராகவும் இருந்தார்.
அவர் முதலில் கோரேகானில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் சதாராவின் கிராந்திசிங் நானா பாட்டீல் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் கர்ப்பத்தின் ஆபத்துள்ள தன்மையை உணர்ந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
பின்னர் அவருக்கு மகப்பேறு மருத்துவர் டாக்டர் சிதாசிவ் தேசாய், டாக்டர் துஷார் மஸ்ராம், மயக்க மருந்து நிபுணர் நீலம் கடம் ஆகியோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
அதன்படி அந்தப் பெண் மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என நான்கு குழந்தைகளை பிரசவித்தார்.
சில குடும்பங்களில் பல பிறப்புகளுக்கு மரபணு முன்கணிப்பு இருந்தாலும், நான்கு குழந்தைகள் பிறப்பது இன்னும் அரிதானது என்றார் டாக்டர் கார்பே.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |