பானிபூரி வாங்கிவிட்டு வந்த கணவன்! பரிதாபமாக உயிரிழந்த மனைவி: விபரீத சம்பவத்தின் முழு பின்னணி
மகாராஷ்டிராவில் கணவன் பானிபூரி வாங்கிட்டு வந்ததால் விரக்தியில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் வசித்து வருபவர் ககினிநாத் சர்வடே(33). இவரின் மனைவி பிரதிக்ஷா(23). இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்டது.
இருப்பினும் இரண்டு பேரும் எப்போதும் எலியும் பூனையுமாய் அடித்து கொள்வது வழக்கம். இந்நிலையில் கடந்த வெள்ளி கிழமை அன்று ககினிநாத் தனது மனைவிக்காக ஆசையாக பானி பூரி வாங்கி வந்துள்ளார்.
ஆனால் பிரதிக்ஷா கணவரின் அன்பை புரிந்து கொள்ளாமல் சண்டை பிடித்துள்ளார். என்னை கேட்காமல் ஏன் பானி பூரி வாங்கிட்டு வந்தீர்கள்.. நான் இரவு உணவு சமைத்துவிட்டதாக கூறி கணவனிடம் பயங்கர தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே பெரிய சண்டையாய் வெடித்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பிரதிக்ஷா சனிக்கிழமை காலையில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலன் கொடுக்காமல் பிரதிக்ஷா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து பிரதிக்ஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி ககினிநாத் சர்வடே மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.