கணவனை கொன்று சடலத்தை ஒரு வாரம் கட்டிலின் கீழுள்ள ஷெல்பிற்குள் மறைத்து வைத்த இளம்மனைவி! அதிர்ச்சி காரணம்
இந்தியாவில் கணவனை கொலை செய்து விட்டு சடலத்தை கட்டிலின் கீழ் இணைக்கப்பட்டிருந்த ஷெல்பிற்குள் ஒரு வாரம் மறைத்து வைத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ். இவரின் சடலம் கடந்த 28ஆம் திகதி அங்குள்ள வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்டது.
இது தொடர்பான விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினேஷின் மனைவிக்கும் நிதின் என்பவருக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த தினேஷ் மனைவியை கண்டித்துள்ளார்.
தனது தொடர்புக்கு தினேஷ் தடங்கலாக உள்ளாரே என கருதிய அவர் மனைவி, நிதின் மற்றும் அவரின் 3 நண்பர்களுடன் சேர்ந்து கணவரை கொல்ல முடிவு செய்தார்.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி தினேஷை ஐந்து பேரும் சேர்ந்து கட்டையால் அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளனர்.
பின்னர் யாரிடமும் தான் சிக்கக்கூடாது என்பதற்காக சடலத்தை கட்டிலின் கீழ் இணைக்கப்பட்டிருந்த ஷெல்பிற்குள் தினேஷ் மனைவி ஒரு வாரம் மறைத்து வைத்திருக்கிறார்.
ஆனால் பின்னர் சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதால் அதை எடுத்து கொண்டு போய் வாய்க்காலில் போட்டுள்ளார்.
சடலத்தை கண்டுபிடித்த பொலிசார் அது குறித்து தினேஷ் மனைவியிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியிருக்கிறார்.
இதையடுத்து பொலிசாருக்கு சந்தேகம் வலுத்து கிடுக்குபிடி விசாரணை செய்ததில் குற்றத்தை ஒப்பு கொண்டிருக்கிறார்.
தற்போது தினேஷ் மனைவியை கைது செய்துள்ள பொலிசார் தலைமறைவாக உள்ள நிதின் உள்ளிட்ட நால்வரையும் தேடி வருகின்றனர்.
