பிரித்தானிய பொலிஸாரின் துரத்தலினால் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!
பிரித்தானியாவில் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட வாகனத்தை பொலிஸார் துரத்திச் சென்றபோது ஏற்பட்ட மோதலில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.
பொலிஸாரின் கார் துரத்தல்
கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட்ஹாமின் ஷா சாலையில், காலை 10 மணியளவில் திருடப்பட்ட வாகனம் என சந்தேகிக்கப்பட்ட கார் ஒன்றை, பொலிஸார் மற்றும் அதிகாரிகள் தங்கள் வாகனத்தில் விரட்டினர்.
ஆனால், அந்த துரத்தல் தொடங்கிய சிறிது நேரத்திலேயே குறித்த கார் விபத்திற்குள்ளானது. அதில் Heather Smedley என்ற 53 வயதுடைய பெண் படுகாயமடைந்தார்.
பொலிஸாரின் வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், குறித்த பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பெண் மரணம்
பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட Heather Smedley சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
'பொலிஸாரின் வாகனம் துரத்தலில் ஈடுபட்டபோது விபத்து ஏற்பட்டது. அதில் காயமடைந்த Heather Smedley என்ற பெண், அவசர சேவைகளின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்' என தெரிவித்துள்ளார்.
இதேபோல், துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தங்களின் இரங்கல் தெரிவிக்கப்படுவதாக ஓல்ட்ஹாம் மாவட்டத்தின் தலைமை கண்காணிப்பாளர் கூறினார்.