உறவில் ஈடுபட்ட பிறகு…காதலனின் தலை மற்றும் ஆண்குறியை வெட்டி வாளியில் வைத்த பெண்!
போதை தலைக்கு ஏறிய நிலையில் உடலுறவில் ஈடுபட்ட பிறகு, காதலனின் தலை மற்றும் ஆண் உறுப்பை வெட்டி வாளியில் வைத்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடலுறவுக்கு பின் காதலனை கொன்ற பெண்
டெய்லர் டெனிஸ் ஷாபிசினஸ்(Taylor Denise Schabusiness)25 என்ற பெண் கடந்த பிப்ரவரி 2022ல் போதை தலைக்கு ஏறிய நிலையில் காதலன் ஷாட் தைரியன்(25) உடன் உடலுறவில் ஈடுபட்ட பிறகு, அவரது தலையை துண்டித்து, பின்னர் அவரது துண்டிக்கப்பட்ட தலை மற்றும் ஆண்குறியை வாளியில் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
தைரியனின் தாய் விஸ்கான்சினின், கிரீன் பே, ஸ்டோனி புரூக் லேனில் உள்ள அவரது வீட்டில் வாளி ஒன்றில் மகனின் தலையை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
Facebook
இதையடுத்து தைரியன்(Shad Thyrion) இடத்திற்கு விரைந்த பொலிஸார் வாளி ஒன்றில் துண்டிக்கப்பட்ட தலையும், துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பையும் கண்டுபிடித்தனர்.
அத்துடன் வீட்டைச் சுற்றி சிதறிக் கிடந்த மற்ற உடல் பாகங்களையும் பார்த்து விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார், பின்னர் ஷாபிசினஸின் வேனில் மனித எச்சங்கள் அடங்கிய சமையல் பாத்திரத்தையும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரை கடந்த ஆண்டு பிப்ரவரி 23ம் திகதி பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Facebook
விசாரணை மனநிலையில் இல்லை
இந்நிலையில் டெய்லர் டெனிஸ் ஷாபிசினஸின் கொலைக் குற்ற விசாரணை மார்ச் 6, 2023 இல் தொடங்கும் என்று ஆன்லைன் பதிவுகள் காட்டுகின்றன.
ஆனால் ஷாபிசினஸ் மீது கொலை செய்தல், சடலத்தை சிதைத்தல் மற்றும் மூன்றாம் நிலை பாலியல் வன்கொடுமை ஆகிய முதல் நிலை குற்ற அறிக்கைகள் சுமத்தப்பட்டுள்ளது.
(Brown Co. Jail)
இதற்கிடையில் ஷாபிசினஸ்-இன் வழக்கறிஞர், Quinn Jolly, அவர் பலமுறை மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் இருமுனை மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவித்துள்ளார், மேலும் மார்ச் மாதம் வரவிருக்கும் நீதிமன்ற விசாரணைக்கு ஏற்ற மனநிலையில் அவர் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உளவியல் நிபுணரான மேத்யூ சீபெல், ஷாபிசினஸ் விசாரணைக்கு தகுதியானவர் என்று தெரிவித்துள்ளார்.