காதலனின் உதவியுடன் கணவரை கொன்ற இளம்பெண்! திடுக்கிட வைக்கும் சம்பவம்
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் காதலனின் உதவியுடன் பெண் ஒருவர் கணவரை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் 28 வயதான ரஷீதா ஷேக் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இவரது காதலன் அமித் மிஷ்ரா என்பவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
சுமார் 12 நாட்களுக்கு முன்னர் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சிறுமியான மகளின் கண்ணெதிரே குற்றவாளிகள் ரயீஸ் ஷேக் என்பவரை கொடூரமாக கொன்றதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தமது படுக்கை அறையிலேயே கணவரின் சடலத்தை புதைத்துவிட்டு, ரஷீதா ஷேக் அங்கிருந்து மாயமாகியுள்ளார்.
இதனிடையே, ஜவுளிக்கடை ஊழியரான ரயீசை காணவில்லை எனக் கூறி அக்கம் பக்கத்தை சேர்ந்த நபர் பொலிசாரை நாடியுள்ளார்.
இந்த நிலையில் ரயீசின் சகோதரர் குடியிருப்புக்கு சென்று பரிசோதனை மேற்கொண்ட நிலையிலேயே கொலை நடந்துள்ளது அம்பலமானது.
தொடர்ந்து பொலிசாரின் உதவியுடன், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.