60 ஆண்டுகளாக உலோக நுரையீரல் உதவியுடன் வாழ்ந்துவந்த பெண்: மின் தடையால் உயிரிழந்த சோகக் கதை
மூன்று வயதில் போலியோ என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், சுமார் 60 ஆண்டுகளாக இயந்திரம் ஒன்றின் உதவியுடன் வாழ்ந்துவந்த நிலையில், ஒரு நாள் திடீரென ஏற்பட்ட மின் தடை அவர் உயிரிழக்கக் காரணமாக அமைந்துவிட்டிருக்கிறது.
உலோக நுரையீரல் உதவியுடன் வாழ்ந்துவந்த பெண்
அமெரிக்காவின் Tennesseeயில் பிறந்த டயான் (Dianne Odell) என்னும் பெண்ணுக்கு மூன்று வயது இருக்கும்போது, அவரை போலியோ என்னும் கொடிய நோய் தாக்கியுள்ளது.
உலோக நுரையீரல் என்று அழைக்கப்படும் ஒரு இயந்திரத்தின் உதவியுடனேயேதான் அவர் வாழ்ந்துவந்துள்ளார்.
AP
அப்படி ஒரு சூழலில் 60 ஆண்டுகள் வாழ்ந்தும், மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்த டயான், தன்னை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பாராம். தனது இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியின் உதவியுடன் விருந்தினர்களுடன் உரையாடுவது, காற்று ஊதுவதன் மூலம் தொலைக்காட்சியை இயக்கும் ஒரு குழாயின் உதவியுடன் தொலைக்காட்சியையும் பார்த்துக்கொண்டு, ஒலி எழுப்பும் ஒரு கணினி உதவியுடன் பேசிக்கொண்டு என மகிழ்ச்சியாகவே இருப்பாராம் டயான்.
உயிரைப் பறித்த மின் தடை
ஆனால், 2008ஆம் ஆண்டு, மே மாதம், டயானுக்கு 61 வயது இருக்கும்போது, ஒருமுறை மின் தடை ஏற்பட, அவரது நுரையீரலுக்குள் காற்றை செலுத்த பயன்படுத்தும் இயந்திரம் செயல்படாமல் போயிருக்கிறது.
அவரது குடும்பத்தினர் எவ்வளவு முயற்சித்தும், அவசர உதவிக்காக வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர்களையும் கை பம்புகளை பயன்படுத்தி முயற்சி செய்தும் அவரது சுவாசத்தை அவர்களால் சரி செய்ய இயலாமல் போயுள்ளது.
ASSOCIATED PRESS
தொடர்ந்து வந்த மாதங்களில் அவரது பெலன் குறைந்துகொண்டே வர, டயான் உயிரிழந்துவிட்டார். சுமார் 60 ஆண்டுகள் இயந்திரம் ஒன்றின் உதவியுடன் வாழ்ந்தும், ஒரு மின் தடை அவரது உயிர் பிரிய காரணமாக அமைந்துவிட்டது சோகம்தான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |