பிளாஸ்டிக்கை தவிர்க்க ராகி மாவில் தேநீர் குவளை தயாரித்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்
பிளாஸ்டிக் குவளைகளுக்கு மாற்றாக ராகி மாவில் தேநீர் குவளைகள் தயாரித்து பெண் ஒருவர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
யார் அவர்?
நாம் தேநீர் அல்லது காபி குடிக்கும்போது பிளாஸ்டிக் குவளைகள் தான் பயன்படுத்துகிறோம். இது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று கூறினாலும் பெரும்பாலும் அதை தான் பயன்படுத்துகிறோம்.
இதற்கு மாற்றாக சுற்றுசூழலுக்கு நன்மை பயக்கும் வகையில் பெண் ஒருவர் புதுவித யோசனையை கையாண்டுள்ளார்.
இந்திய மாநிலமான ஆந்திரப்பிரதேசம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஜெயலட்சுமி. இவர் பிளாஸ்டிக் குவளைகளுக்கு பதிலாக ராகி குவளைகள் செய்து சுய தொழில் முனைவோராக மாறியுள்ளார்.
அதாவது இவர் ராகி அல்லது அரிசி மாவினை கொண்டு இந்த குவளைகள் தயாரிக்கிறார். இதற்காக 2 மாதங்கள் முயற்சி செய்து இதனை தயாரித்ததாக ஆசிரியை கூறியுள்ளார்.
மக்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்தக்கூடாது என்ற காரணத்திற்காவே இதனை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஒரு மாதத்திற்கு 30,000 இல் இருந்து 40,000 குவளைகள் வரை உற்பத்தி செய்கிறார். இதனால் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்.
இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தபோது கணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வேலையை விடுத்து அவரை வீட்டில் இருந்தே பார்த்துக் கொள்ளும்படியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அப்போது நிதி ரீதியாக பிரச்னை வந்த போது சுயதொழில் தொடங்கி சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளார். பின்னர், மத்திய அரசின் சிறு தொழில் திட்டத்தின் கீழ் கடன் வாங்கி தொழில் தொடங்கியுள்ளார்.
இவர் தயார் செய்யும் ராகி குவளைகள் அளவுக்கு ஏற்ப 2.5 ரூபாயில் இருந்து 3.5 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த குவளைகள் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழ்நாடு , கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |