2.52 டிரில்லியன் டொலர் நிறுவனத்தை வழிநடத்தும் தமிழர்... மனைவி முன்னாள் ஐ.ஐ.டி மாணவி
தொழில்நுட்ப உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவரை திருமணம் செய்துகொண்ட போதும், அஞ்சலி பிச்சை தனிப்பட்ட வாழ்க்கையை திறம்பட பராமரித்து வருகிறார்.
வணிக செயல்பாட்டு மேலாளராக
அஞ்சலியின் தாயாரைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை என்றாலும், அவரது தந்தை ஒலராம் ஹரியானி, ராஜஸ்தானின் கோட்டாவில் அரசு ஊழியராக இருந்தார், அங்கு அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரிந்தார்.
முதல் மனைவியை இழந்த பிறகு, 2015 ஆம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டு, 70 வயதில் மாதுரி சர்மாவை மணந்தார். தனது கணவரைப் போலவே, அஞ்சலியும் தொழில்நுட்பத் துறையில் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
தற்போது அவர் உலகளாவிய நிதி மென்பொருள் நிறுவனமான (Intuit) இன்ட்யூட்டில் வணிக செயல்பாட்டு மேலாளராகப் பணிபுரிகிறார். இதற்கு முன்பு, அவர் 1999 முதல் 2002 வரை ஆக்சென்ச்சரில் (Accenture) வணிக ஆய்வாளராகப் பணியாற்றியுள்ளார்.
கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) முன்னாள் மாணவியான அஞ்சலி, அங்கு அவர் வேதியியல் பொறியியலில் பட்டம் பெற்றார். தற்போது 54 வயதாகும் அஞ்சலி ஐஐடி கரக்பூரில் இளங்கலைப் படிக்கும் போது சுந்தர் பிச்சையை சந்தித்துள்ளார்.
பகிர்ந்துகொண்டது இல்லை
ஐஐடி கரக்பூர் அனுபவம் குறித்து தெரிவிக்கையில், தாம் வளர்ந்த இரண்டாவது வீடு அதுவென்றும், அன்பு மனைவி அஞ்சலியை முதன்முதலில் சந்தித்த இடம் இது என்றும், இதனாலையே ஐஐடி கரக்பூர் தனது இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது என்றும் பதிவு செய்துள்ளார் சுந்தர் பிச்சை.
பிச்சை தம்பதியினர் தங்கள் குடும்ப வாழ்க்கையைப் பற்றி பொதுவெளியில் பகிர்ந்துகொண்டது இல்லை. இருப்பினும், அவர்களுக்கு காவ்யா, கிரண் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
2019 டிசம்பர் மாதம் முதல் சுந்தர் பிச்சை Alphabet Inc Class C என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 2.52 டிரில்லியன் டொலராகும்.
இன்றைய நிலவரப்படி இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 1.47 சதவிகிதம் அதிகரித்து 205.60 டொலர் என்றே பதிவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |