கொசோவோ நாட்டு பிரதமர் மீது முட்டை வீசிய எதிர்க்கட்சி எம் பி: பரபரப்பான நாடாளுமன்றம்
கொசேவோ நாடாளுமன்றத்தில் இடைக்கால பிரதமர் மீது எதிர்க்கட்சி எம்பி முட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முட்டை வீசிய எம்பி
கொசேவோ(Kosovo) நாட்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது இடைக்கால பிரதமராக பதவியேற்றுள்ள அல்பின் குர்தி மீது எதிர்க்கட்சி எம்பி முட்டை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் மாத தேர்தலுக்கு பிறகு நாட்டின் நாடாளுமன்றத்தை கட்டமைப்பதற்காக கூட்டப்பட்ட கூட்டத் தொடரின் போது இந்த சம்பவமானது அரங்கேறியுள்ளது.
நாட்டின் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கூடுதல் அவகாசம் தேவை என்றும், இதுகுறித்து நடவடிக்கையில் எதிர்கட்சிகளுடன் அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் தற்காலிக பிரதமர் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து சலசலப்பு ஏற்பட்டது,
இதனை தொடர்ந்து அலையன்ஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டைம் காத்ரிஜாஜ் தன்னுடைய பள்ளியில் வைத்திருந்த பழுப்பு நிற முட்டைகளை துக்கி அவர் மீது வீசத் தொடங்கினார்.
An opposition lawmaker threw eggs at Kosovo's acting Prime Minister Albin Kurti after he told parliament he needed more time to hold talks with other parties before proposing a candidate for speaker following the June snap election pic.twitter.com/iPBaV6cQij
— Reuters (@Reuters) August 8, 2026
முட்டைகள் வீசியதோடு, தற்காலிக பிரதமரை நோக்கி “அவமானம், அவமானம்” என உரக்க கத்தியதும் குறிப்பிடத்தக்கது.
உடனடியாக இதில் தலையீட்டு சக எம்பி-களும், நாடாளுமன்ற பாதுகாப்பு பணியாளர்களும் அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த எதிர்பாராத திடீர் சம்பவம் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |