லண்டனில் பட்டப்பகலில் கொல்லப்பட்ட பெண்மணி: ஒரு புதிய தகவல்
லண்டனில் பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட பெண்மணி, இந்திய வம்சாவளியினர் என தகவல் வெளியாகியுள்ளது.
பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்ட பெண்
வியாழக்கிழமையன்று, காலை 11.50 மணியளவில், லண்டனிலுள்ள Burnt Oak என்னுமிடத்தில், பெண்ணொருவர் பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்டார். அவர் உதவி கோரி கதற, அக்கம்பக்கத்தினர் அவருக்கு உதவ ஓடியதுடன், பொலிசாருக்கும் தகவலளித்தனர்.
Credit: Met Police
சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த அவசர உதவிக்குழுவினர் அவருக்கு சிகிச்சையளித்தும் அவரை அவர்களால் காப்பாற்ற முடியாமல் போனது. அவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.
யார் அவர்?
அந்தப் பெண்ணின் பெயர் அனிதா (Anita Mukhey, 66) என்றும், அவர் பிரித்தானிய மருத்துவ அமைப்பான NHSஇல் பகுதி நேரப் பணியாற்றிவந்தார் என்றும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், கொல்லப்பட்ட அனிதா, இந்திய வம்சாவளியினர் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவர், இந்தியாவின் புனேயில் பிறந்தவர் ஆவார். அனிதாவின் கணவர் பெயர் ஹரி. தம்பதியருக்கு லைலா, தேவ் என்னும் இரண்டு பிள்ளைகளும், இரண்டு பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
Credit: © Nigel Howard / NIGEL HOWARD MEDIA
இதற்கிடையில், அனிதாவைக் கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் ஜலால் (Jalal Debella, 22). அவர் எந்த நாட்டவர் என்பதைக் குறித்த விவரங்களை இப்போது வெளியிடமாட்டோம் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
ஜலால் எதற்காக அனிதாவைக் கத்தியால் குத்தினார் என்பது தெரிவிக்கப்படாத நிலையில், சம்பவத்தைக் கண்ணால் கண்ட Jess Bloom (24) என்னும் பெண், ஜலால் அனிதாவின் கைப்பையைப் பறிக்க முயன்றதைத் தான் கண்டதாகத் தெரிவித்துள்ளார். ஜலால் பையைப் பறிக்க முயல, அனிதா, விடமுடியாது என்று சொல்லிக்கொண்டே பையைப் பிடித்து இழுத்துள்ளார்.
Credit: © Nigel Howard / NIGEL HOWARD MEDIA
உடனே, அவரைப் பிடித்துக் கீழே தள்ளி, மூன்று முறை கத்தியால் குத்தியுள்ளார் ஜலால். அனிதா இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |