உக்ரேனிய நிற ஆடை அணிந்த பெண்..திரைப்பட விழாவில் செய்த அதிர்ச்சி செயல்
கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண்ணொருவர், உக்ரேனிய கொடியின் நிறத்தில் ஆடை அணிந்தபடி, போலியான இரத்தத்தை தன் மீது ஊற்றிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்ணின் திடீர் ஆர்ப்பாட்டம்
பிரான்சின் கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரேனிய கொடியின் நிறத்தில் ஆடை அணிந்த பெண்ணொருவர், சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார்.
அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கேப்ஸ்யூல் ஒன்றை வெளியே எடுத்து, தன் தலையின் மீது பிழிந்து போலி இரத்தத்தை வரவழைத்தார்.
இது அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே விரைந்த பாதுகாவலர் அப்பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.
காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை
அவரது இந்த அதிர்ச்சிகர ஆர்ப்பாட்டம் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை கண்டிக்க செய்தாரா அல்லது பிரெஞ்சு இயக்குனரின் Acide திரைப்படத்தின் முதல் காட்சியில் ஏன் நடத்தினார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஏற்கனவே, திரைப்பட விழாவில் புடினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் வகையில் வித்தியாசமாக நடந்து கொண்டது கடந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
AP