பாக்முட் நகரை முழுமையாக கைப்பற்றிய ரஷ்யா: வீடியோ வெளியிட்ட வாக்னர் குழு
11 மாத தொடர் போராட்டத்தை தொடர்ந்து பாக்முட் நகரை ரஷ்யா முழுமையாக கைப்பற்றி விட்டதாக ரஷ்ய ராணுவத் தளபதி யெவ்கெனி பிரிகோஷினி அறிவித்துள்ளார்.
பாக்முட்-ஐ கைப்பற்றி விட்டோம்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 15 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், பாக்முட் நகரை கைப்பற்றுவதற்கான போர் நடவடிக்கையில் ரஷ்யா தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான பாக்முட்டை முழுமையாக கைப்பற்றி விட்டதாக, ரஷ்ய ராணுவத் தளபதி யெய்கெனி பிரிகோஷின் அறிவித்துள்ளார்.
BREAKING: Wagner Group chief claims his forces have taken control of Bakhmut pic.twitter.com/GSMfgpnq8l
— The Spectator Index (@spectatorindex) May 20, 2023
இதனை உறுதிப்படுத்தும் விதமாக உக்ரைனில் ரஷ்யாவிற்காக சண்டையிட்டு வரும் வாக்னர் படை ஆயுதக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் பாக்முட் நகரில் ரஷ்ய தேசியக் கொடியை வாக்னர் வீரர்கள் ஏற்றும் வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
மறுப்பு தெரிவித்த கருத்துள்ள உக்ரைன்
இதையடுத்து ரஷ்யாவின் கூற்றை உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் உக்ரைனின் மூலோபாய நகரான பாக்முட்டில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாக உக்ரைனிய ராணுவ செய்தி தொடர்பாளர் செர்ஹி செரேவதி தெரிவித்துள்ளார்.