கணவனுடன் சண்டை: குழந்தைகளை கிணற்றில் வீசிய பெண் கைது
Woman pushes daughter, nephew into well after dispute with husband: கணவனுடனான சண்டை காரணமாக, தன் மகளையும் உறவினரின் குழந்தையையும் கிணற்றில் தள்ளியுள்ளார் பெண்ணொருவர்.
கர்நாடகா மாநிலத்திலுள்ள மங்களூருவில் குழந்தைகள் இருவர் கிணற்றில் விழுந்துவிட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆனால், விசாரணையில், பெண்ணொருவர் அவர்களை கிணற்றில் தள்ளியது தெரியவந்துள்ளது.
குழந்தைகளை கிணற்றில் தள்ளிய பெண்
அபுபக்கர் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், அவரது மருமகளான நூருன்னிசா, தன் மகளையும், தன் கணவனுடைய சகோதரியின் மகனையும் கிணற்றில் தள்ளியது தெரியவந்துள்ளது.

நூருன்னிசாவுக்கும் அவரது கணவரான சினானுக்கும் தகராறு இருந்துவந்துள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை தன் கணவருடன் நூருன்னிசா மொபைலில் பேசும்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, நூருன்னிசா தனது மகளான மூன்று வயதேயான ஆலியாவையும், தன் கணவரின் சகோதரி மகனான மூன்றரை வயது சிறுவனான முகம்மது ராபியையும், கிணற்றில் தள்ளியுள்ளார்.
முகம்மது ராபி உயிரிழந்துவிட்ட நிலையில், ஆலியா உயிர் பிழைத்துக்கொண்டாள், அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.
பொலிசார் நூருன்னிசாவைக் கைது செய்துள்ள நிலையில், அவர் மீது, கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.