பல் மருத்துவத்தை விட்டுவிட்டு முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்
பல் மருத்துவத்தை விட்டுவிட்டு சிவில் சர்வீஸில் சேர முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்ணின் தகவல்கள் உள்ளே.
யார் அந்த பெண்?
2018 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான நவ்ஜோத் சிமி தனது கடின உழைப்பு மற்றும் அழகு இரண்டாலும் சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளார்.
இந்திய மாநிலமான பஞ்சாப், குருதாஸ்பூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் நவ்ஜோத் சிமி. இவர் அங்குள்ள மாடல் பப்ளிக் பள்ளியில் படித்து பின்னர் லூதியானாவில் உள்ள பாபா ஜஸ்வந்த் சிங் பல் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பல் அறுவை சிகிச்சையில் (BDS) பட்டம் பெற்றார்.
பல் மருத்துவத்தில் சிறந்து விளங்கினாலும், சிவில் சர்வீசஸில் சேர்ந்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார் நவ்ஜோத் சிமி.
பட்டப்படிப்பு முடித்த பிறகு பல் மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கிய நவ்ஜோத் UPSC தேர்வுகளையும் முயற்சித்தார். 2018 இல் முதல் தேர்வை எழுதி 735 வது இடத்தைப் பிடித்த அவர் பீகார் கேடரைத் தேர்ந்தெடுத்தார்.
பின்பு, ஹைதராபாத்தின் தேசிய பொலிஸ் அகாடமியில் பயிற்சி பெற்றார். அதன் பிறகு பாட்னாவில் பணியமர்த்தப்பட்ட நவ்ஜோத் துணை காவல் கண்காணிப்பாளராக (DSP) நியமிக்கப்பட்டார்.
‘பீகாரின் அழகு ராணி’ என்று பிரபலமாக அறியப்பட்ட நவ்ஜோத் சிமி சமீபத்தில் பெகுசராய்க்கு பீகார் ராணுவ காவல்துறை (BMP) 8 இன் கமாண்டண்டாக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. இவர் 2015 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான துஷார் சிங்லாவை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |