ரூ 150 கோடி வாய்ப்பை நிராகரித்தவர்... இன்று ரூ 8300 கோடி நிறுவனத்தை உருவாக்கி சாதனை
புலம்பெயர் மக்களால், அதுவும் ஆசிய நாட்டவர்களால் அமெரிக்காவில் தொழில் தொடங்கி சாதிப்பது என்பது சிம்ம சொப்பனமாக இருந்த காலகட்டத்தில், பெண் ஒருவர் சாதித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டவரான
அமெரிக்காவில் புலம்பெயர்ந்து புளோரிடா மாகாணத்தில் வசித்துவந்த பெண் ஒருவர் சொந்தமாக நிறுவனம் ஒன்றை உருவாக்கி, அந்த நிறுவனத்தை சுமார் 8,300 கோடி சந்தை மதிப்பு அளவுக்கு மாற்றியுள்ளார்.
2014ல் சுனீரா மற்றும் அவரது சகோதரர் சல் ரெஹ்மெத்துல்லா ஆகியோர் இணைந்து Stax என்ற நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனத்தின் சேவையை மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி பெற முடியும், ஆனால் இதுபோன்ற வேறு நிறுவனங்களில் சதவிகித அடிப்படையில் கட்டணம் வசூலிக்கின்றனர்.
பாகிஸ்தான் நாட்டவரான சுனீராவின் குடும்பம் அமெரிக்காவில் குடிபெயர்ந்த பின்னர் புளோரிடாவில் வசித்து வந்தனர். புளோரிடா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுனீரா தொடர்ந்து First Data என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இங்கு பணியாற்றும் போது தான் இந்த சதவிகித அடிப்படையிலான கட்டணம் வசூலிக்கும் சேவைக்கு மாற்றாக ஒரு திட்டத்தை சுனீரா உருவாக்கியுள்ளார். தமது திட்டத்தை தாம் பணியாற்றும் நிறுவனத்தின் தலைமையிடத்திலும், சுமார் 12 வங்கிகளிலும் குறிப்பிட்டு உதவி நாடியுள்ளார்.
ஆனால் அவர்கள் மறுத்துள்ளனர். இருப்பினும் நம்பிக்கை கைவிடாத சுனீரா அந்த திட்டத்தை தமது பெற்றோரிடம் விளக்கியுள்ளார். அவர்கள் அளித்த ஊக்கத்தால், சகோதரர்கள் இருவரும் இணைந்து மாதாந்திர கட்டண அடிப்படையிலான சேவையை உருவாக்கினர்.
50,000 டொலர் கடனாகப் பெற்று
இதனிடையே ஆர்லாண்டோ நகருக்கு சென்று, அங்குள்ள தொழில் நிறுவனங்களில் தமது திட்டம் குறித்து விளக்கி உதவி கோரியுள்ளார். அதில் ஒரு நிறுவனம் இவர்களுக்கு 100 வாடிக்கையாளர்களை ஒப்பந்தம் செய்து தர முடிவு செய்தது.
அத்துடன், இந்த திட்டத்திற்கு மொத்தமாக 145 கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளது. தங்கள் திட்டம் மீது நம்பிக்கை இருப்பதால், அந்த 145 கோடியை நிராகரித்துள்ளார் சுனீரா. தொடர்ந்து சகோதரர்கள் இருவரும் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு, Stax நிறுவனத்தில் முழு நேரமும் பணியாற்ற முடிவு செய்தனர்.
முதலீடு எதுவும் ஈட்ட முடியாத நிலையில், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து 50,000 டொலர் கடனாகப் பெற்று, அந்த தொகையை தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
ஆனால் தற்போது Stax நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். சுமார் 10 ஆண்டுகள் Stax நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய சுனீரா, அந்த பொறுப்பில் இருந்து விலகினார். தற்போது Stax நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது ரூ 8,308 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |