கர்ப்பமாக இருப்பதாக எண்ணிய பெண்... ஸ்கேனில் தெரிந்த அதிரவைத்த காட்சி
தான் கர்ப்பமாக இருப்பதாக எண்ணிய ஒரு பெண், கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்குச் செல்ல, அங்கு அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
மருத்துவமனையில், மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்துள்ளனர். அந்த ஸ்கேனில் தெரிந்த காட்சி அந்தப் பெண்ணை திகிலில் உறையவைத்துவிட்டது.
ஆம், அவரது கருப்பைக்குள், முட்டை அளவிலான ஒரு கட்டி ஒன்று வளர்ந்திருக்கிறது. அந்தக் கட்டிக்குள் பற்களும் முடியும் காணப்பட்டுள்ளன.
நடந்தது என்னவென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் கர்ப்பமுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்திருக்கிறார்.
அந்த குழந்தை அவரது வயிற்றில் இருக்கும்போது, அதாவது அது ஒரு சிறு கருவாக இருக்கும்போது, அதன் துகள்கள் சில தனியாக பிரிந்துபோய், இப்படி பற்களாகவும் முடியாகவும் வளரத் துவங்கிவிட்டிருப்பதாக தெரிவிக்கிறார் அவர்.
பொதுவாக இதுபோன்ற கட்டிகள் தானாக வெளியேறிவிடுமாம். ஆனால், அந்தப் பெண்ணைப் பொருத்தவரை, அந்தக் கட்டி வெளியேறவும் இல்லை, அத்துடன், அவருக்கும் கடுமையான வலியும் இரத்தப்போக்கும் உள்ளன.
ஆகவே, மருத்துவரிடம் சென்று அந்தக் கட்டியை அகற்ற அவர் முடிவு செய்துள்ளாராம்.