கொரோனாவுக்கு பிந்தைய யாரும் பேசாத பயமுறுத்தும் அறிகுறிகள்: பெண் ஒருவர் வெளிப்படை
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சுமார் மூன்றரை வாரங்களுக்கு பின்னர் அதன் பக்கவிளைவுகளை அனுபவித்த பெண் ஒருவர் தமக்கு நடந்ததை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
அவுஸ்திரேலிய ஊடக பிரபலம் Charlotte Mortlock என்பவரே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பின்னர் தமக்கு ஏற்பட்ட பயமுறுத்தும் அறிகுறிகள் தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனவரி தொடக்கத்தில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானார் பத்திரிகையாளரான Charlotte Mortlock. சாதாரண அறிகுறிகளே முதலில் தென்பட்டதாக கூறும் அவர், பரிசோதனையில் கொரோனா பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்த வியாழக்கிழமை Charlotte Mortlock வெளியிட்ட தகவல்கள், பயமுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. பொதுவாக நமது இருதயம் துடிப்பதை நாம் உணர்வதில்லை. ஆனால் உடற்பயிற்சி உள்ளிட்ட கடுமையான உடல் உழைப்பு வேளைகளில் இதயம் துடிப்பதை உணரலாம்.
Charlotte Mortlock தெரிவிக்கையில், சமீப நாட்களாக அவரது இருதயம் வழக்கத்திற்கு மாறாக துடிப்பதாகவும், ஓய்வெடுக்கும் வேளையில் மட்டுமின்றி, தூக்கத்தில் இருக்கும் போதும் இருதயம் வேகமாக துடிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மனதை அமைதிப்படுத்த புத்தகம் வாசிப்பது, தியானம், யோகா என ஈடுபட்டாலும், இதயம் துடிப்பது மட்டும் தனியாக தெரிவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Charlotte மட்டுமின்றி, பலர் இதே நிலையில் இருப்பதாகவும், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து சில வாரங்களில் இவாறான நிலை ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் சுமார் 2 வாரங்களுக்கு தூங்கவே இல்லை என்கிறார் இன்னொருவர். தற்போது மார்பில் வலியும் லேசான மூச்சுத்திணறலும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்புக்கு பிந்தைய பக்கவிளைவுகள் பலருக்கும் பல வகையாக இருப்பது உண்மை தான் என குறிப்பிடுகின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
குறிப்பாக ஓமிக்ரான் மாறுபாடால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குணமடைந்த பின்னர் இந்த நீண்ட கால பக்கவிளைவுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.