இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் தோண்டி எடுக்கப்பட்ட பெண்மணியின் உடல்: ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள விடயம்
அமெரிக்காவில், இறந்த கன்னியாஸ்திரீ ஒருவரின் உடல் புதைக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்ட நிலையில், அது சற்றும் அழுகாமல் முழுமையாக இருக்கும் அற்புதத்தைக் காண ஏராளம் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.
ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள விடயம்
அமெரிக்காவின் Missouri என்னுமிடத்தில் அமைந்துள்ள சிறு நகரத்தில் கன்னியாஸ்திரீயாக வாழ்ந்தவர் Sister Wilhelmina Lancaster.
Wilhelmina, 2019ஆம் ஆண்டு, தனது 95ஆம் வயதில் இயற்கை எய்தினார்.
Image: Facebook
கடந்த வியாழக்கிழமை, கன்னியாஸ்திரீயாகிய Wilhelminaவின் உடலை தேவாலயத்திற்குள் புதைப்பதற்காக, அவரது சவப்பெட்டி தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது, சவப்பெட்டியில் இருந்த கீறல் வழியாக Wilhelminaவின் பாதத்தைக் கவனித்த ஒரு சகோதரி, அது அழுகாமல் முழுமையாக இருப்பதைக் கவனித்துள்ளார்.
Image: Facebook
அதைத் தொடர்ந்து அவர்கள் சவப்பெட்டியைத் திறந்துபார்க்க, Wilhelminaவின் உடல், மண் விழுந்து அழுத்தியதால் சற்று பாதிக்கப்பட்டிருந்த அவரது கண் தவிர்த்து, மற்ற பாகங்கள் அழுகாமல் அப்படியே இருப்பதைக் கண்டுள்ளனர்.
Image: The Benedictines of Mary Queen of Apostles
இப்போது Wilhelminaவின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், புதைக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளாகியும் Wilhelminaவின் உடல் அழுகாமல் இருக்கும் அற்புதத்தைக் காண மக்கள் திரள் திரளாக Missouriக்கு வருகிறார்கள்.