ஒலிம்பிக்கில் பதக்கம்: வெற்றி வாகை சூடிய நபருக்கு முன்னாள் காதலி அனுப்பிய உருக்கமான மெசேஜ்
ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற Hayden Wilde என்பவருக்கு அவரது முன்னாள் காதலி கூறிய மெசேஜ் தொடர்பான தகவல்கள் வைரலாகி வருகிறது.
ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில் Triathlon ஆடவர் ஒற்றை பிரிவில் நியூசிலாந்தை சேர்ந்த Hayden Wilde என்பவர் வெண்கல பதக்கம் வென்றார்.
இது இந்தாண்டுக்கான நியூசிலாந்தின் முதல் பதக்கம் என்பதால் மக்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் உள்ளூர் தொலைக்காட்சியான 1News அங்கிருந்த மக்களிடம், சாதனை புரிந்த Hayden -க்கு என்ன மெசேஜ் சொல்வீர்கள் என்ற கேள்வியுடன் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தது.
அப்போது Hayden-ன் முன்னாள் காதலி, உன்னை வேண்டாம் என்று கூறியதற்காக நான் வருத்தப்படுகிறேன் என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் நாம் இருவரும் மீண்டும் ஒன்று சேருவது சாத்தியமில்லை என்ற போதும், இதற்காக பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த விருதை பெறுவதற்காக Hayden எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் அற்புதமானது எனவும் தெரிவித்துள்ளார்.