சுவிட்சர்லாந்தில் நதியில் அடித்துச் செல்லப்பட்டபோது தன் உயிரைக் காப்பாற்றியவரை தேடும் இளம்பெண்
சுவிட்சர்லாந்தில், இளவேனிற்காலத்தில் நதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார் ஒரு இளம்பெண்.
அப்போது தன் உயிரைக் காப்பாற்றியவரை தற்போது தேடிவருகிறார் அந்த இளம்பெண்.
நதியில் அடித்துச் செல்லப்பட்ட இளம்பெண்
ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி, மதியம் 2.00 மணியளவில், ஜெனீவாவின் Satigny என்னுமிடத்தில் தன் நாய்களை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்றுகொண்டிருந்தார் ஃப்ரான்செஸ்கா (26) என்னும் இளம்பெண்.
அப்போது அவருடைய நாய்களில் ஒன்று ஆற்றில் செல்லும் ஒரு வாத்தைக் கண்டு தண்ணீரில் குதித்துள்ளது.
நாயைக் காப்பாற்ற நதியில் குதித்த பிரான்செஸ்காவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
சுயநினைவிழந்த ஃப்ரான்செஸ்கா கண் விழிக்கும்போது, தன்னை ஒரு இளம்பெண் மடியில் படுக்கவைத்திருப்பதைக் கண்டுள்ளார்.
பின்னர் சமூக ஊடகங்கள் வயிலாக அந்த இளம்பெண்ணைத் தேடியும் ஃப்ரான்செஸ்காவால் அவரைக் கண்டுபிடிக்கமுடியவில்லையாம்.
தன் உயிரைக் காப்பாற்றிய அந்தப் பெண்ணை தேடும் முயற்சியில் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளார் ஃப்ரான்செஸ்கா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |