சுற்றுலா சென்ற நாடுகளில் பணத்தை கொட்டி பல பொருட்களை வாங்கிய பெண்! ஊர் திரும்பி சூட்கேஸை திறந்தபோது காத்திருந்த ஏமாற்றம்
ஐரோப்பிய நாடுகளுக்கு விடுமுறை சுற்றுலா சென்ற அமெரிக்க பெண் $3,000 மதிப்பிலான பரிசு பொருட்களை வாங்கி கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் பொருட்கள் இருந்த சூட்கேஸ் பையை திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளார்.
Portsmouth, New Hampshire-ஐ சேர்ந்த நடுத்தர வயது பெண்ணான Gina Sheldon இத்தாலிக்கு 11 நாட்கள் சுற்றுலா சென்றார். பின்னர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ்க்கு தனது தொழில் தொடர்பாக சென்றார்.
அங்கிருந்து விமானம் மூலம் சொந்த ஊருக்கு திரும்பிய Gina தனது பையை திறந்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் தனது குழந்தைக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு மற்றும் தனக்கு என $3,000 மதிப்பிலான பல பொருட்களை அவர் சுற்றுலா சென்ற இடத்தில் இருந்து வாங்கி அந்த பையில் வைத்திருந்தார்.
ஆனால் பையை திறந்த போது அதன் உள்ளே நாய்க்கான உணவுகள், பழைய டீ சர்ட் மற்றும் ஷேவிங் கிரீம் பாட்டில் போன்ற பொருட்கள் இருந்தன. Gina கூறுகையில், என்னுடைய பொருட்கள் இருந்த பை பிரான்ஸ் விமான நிலையத்தில் தான் மாறியிருக்கும்.
$3,000 என்ற பெரிய மதிப்பிலான பொருட்கள் காணாமல் போனது வேதனையளிக்கிறது என கூறியுள்ளார்.
Gina, டெல்டா ஏர்லைன் மூலம் தனது விமானத்தை முன்பதிவு செய்திருந்தார், ஆனால் அது ஏர் பிரான்ஸ் மூலம் இயக்கப்பட்டது.
டெல்டா ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ஏர் பிரான்ஸ் விமானம் 334ல் பயணித்த பயணியின் இந்த அனுபவத்திற்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்.
இது தொடர்பாக நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம், விரைவில் பயணிக்கு இதில் தீர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.