நள்ளிரவில் கண்விழித்த பெண்! இருட்டில் தெரிந்த கருப்பான உருவம்.. திரைப்படபாணியில் அரங்கேறிய திகில் சம்பவம்
பரமக்குடியில் நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த பெண்மணி கண்விழித்து பார்த்த பொழுது கருப்பான உருவம் தென்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் லட்சுமி(32). இவர் நள்ளிரவில் நன்றாக தூங்கி கொண்டிருந்தபோது திடீரென்று ஏதோ ஒரு சத்தம் கேட்டதால் கண் விழித்து பார்த்துள்ளார்.
அப்போது பீரோவுக்கு அருகே கருப்பு உருவம் இருப்பது போல் தெரிந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த லட்சுமி உடனே படுக்கையை விட்டு எழுந்து விளக்கை போட்டுள்ளார். இவர் எதிர்பாராத நேரத்தில் ஒரு ஆண் உருவம் அவரை கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
அவர் உடனே கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் திரண்டு அவரை மடக்கி பிடித்து கம்பியில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெயர் சுடலை என்பதும் நீண்ட நாட்களாக தேடப்பட்டிருந்த திருடன் என்பது தெரியவந்தது.
பொதுமக்கள் உடனே நடந்த சம்பவம் குறித்து பொலிஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுடலையை விசாரித்த பொழுது அவர் செய்த தவறை ஒப்பு கொண்டுள்ளார்.
அன்றிரவு மட்டும் சுடலை 20 ஆயிரம் ரூபாய் மற்றும் 3 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று ஒருநாள் இரவு மட்டும் 20 ஆயிரம் ரூபாய் மற்றும் 3 சவரன் தங்க நகைகளை திருடி பாக்கெட்டில் மறைத்து வைத்த்திருந்தார். அதனை பொதுமக்கள் மற்றும் பொலிசார் பறிமுதல் செய்தனர்.