கடைக்குள் திருடச்சென்ற தாய்; வெளியே காரில் எரிந்துகொண்டிருந்த குழந்தைகள்
அமெரிக்காவில் பெண் ஒருவர் கடைக்குள் திருடிக்கொண்டிருந்த நேரத்தில் அவரது இரண்டு குழந்தைகளுடன் வெளியே நிறுத்தப்பட்ட கார் எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடைக்குள் திருடச்சென்ற பெண்
24 வயதான அலிசியா மூர் (Alicia Moore), மே 26 அன்று புளோரிடாவில் Oviedo மாலில் உள்ள Dillard's டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு வெளியே தனது காரை நிறுத்திவிட்டு, தனது இரண்டு குழந்தைகளை வாகனத்திற்குள் விட்டுச் சென்றார்.
பின்னர் அவள் வேறொரு ஆணுடன் மாலுக்குள் சென்று கடையில் இருந்து திருடத் தொடங்கியுள்ளார்.
Photo credit: City of Oviedo
தீப்பிடித்து எறிந்த கார்
ஒரு மணி நேரம் கழித்து கடையை விட்டு வெளியே வந்தபோது, தனது கார் முழுவதும் தீப்பிடித்து எரிவதை கண்ட அலிசியா மூர், அவர் திருடப்பட்டதாகக் கூறப்படும் பொருட்களை கீழே போட்டுவிட்டு மாலில் இருந்து வெளியே ஓடினார்.
அதிர்ஷ்டவசமாக, அருகில் இருந்த கடைக்காரர்கள் காருக்கு ஓடிச்சென்று உள்ளே இருந்த இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற உதவினார்கள். உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் அவசர சேவைகளும் வந்துவிட்டன. குழந்தைகள் முதல் நிலை தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Photo credit: City of Oviedo
பல வழக்குகள்
அலிசியா மூர் கைது செய்யப்பட்டு அவர்மீது பல குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
வாகனம் தீயில் எரிந்து நாசமானது என்று பொலிஸார் தெரிவித்தனர். ஆனால், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
Alicia Moore (Photo via Seminole County Jail)
அலிசியா மூர் மீது ஏற்கெனவே 2017-ஆம் ஆண்டில் டார்கெட்டில் சுமார் $1,000 மதிப்பிலான பொருட்களைக் கடையில் திருடியதற்காகவும், இரண்டாவதாக 2018-ல் அவர் பணிபுரிந்த 7-11 இல் இருந்து $1,500 பரிசு அட்டைகளைத் திருடியதற்காகவும் இரண்டு முறை பெரும் திருட்டுக் குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் 27-ஆம் திகதி அவர் நீதிமன்றத்திற்கு வரவுள்ளார்.