100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரிகளுக்கு ரூ.10 கோடி செலவு செய்த பெண்.., யார் இவர்?
பிரேசிலைச் சேர்ந்த பெண் ஒருவர் 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரிகளுக்கு ரூ.10 கோடி செலவு செய்துள்ளார்.
ரூ.10 கோடி செலவு
இன்றைய உலகில் பலரும் தங்களது தோற்றத்தை மாற்றுவதற்கு அதிகளவு அளவு பணத்தை முதலீடு செய்கிறார்கள்.
ஒப்பனை அறுவை சிகிச்சைகள் மற்றும் தோல் சிகிச்சைகள் முதல் உடற்பயிற்சி திட்டங்கள் மற்றும் உயர்தர அழகு சாதனங்கள் வரை தோற்றத்தை மாற்றுவதற்கு பல விடயங்களை செய்து வருகின்றனர்.
அந்தவகையில், பெண் ஒருவர் 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரிகளுக்கு ரூ.10 கோடி செலவு செய்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று உட்பட கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்ட போதிலும், அறுவை சிகிச்சையைத் தொடர உறுதியுடன் இருக்கிறார்.
பிரேசிலைச் சேர்ந்த ஜெசிகா ஆல்வ்ஸ் என்ற பெண், அழகு சாதனப் பொருட்களை விரும்பி உலக அளவில் பரபரப்பாக மாறியுள்ளார்.
41 வயதான இவர், மார்பகம், இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், முகத்தை உயர்த்துதல் மற்றும் 12 மூக்கு வேலைகள் போன்ற பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.
மேலும், மெலிதான இடுப்பிற்காக நான்கு விலா எலும்புகளை அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொடுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெசிகா மேற்கொண்ட மூக்கு அறுவை சிகிச்சையால் அவருக்கு கடுமையான தொற்று ஏற்பட்டது. இதனால் அவர், மூக்கை இழக்க நேரிடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனாலும், பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு குணமடைந்தார்.
இதுகுறித்து ஜெசிகா கூறுகையில், " பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை நான் மகிழ்ச்சி மற்றும் சுயமரியாதைக்கான ஒன்றாக பார்க்கிறேன். எனது முகம் இப்போது எப்படி இருக்கிறது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அறுவை சிகிச்சை எனக்கு நம்பிக்கையை கொடுத்தது, இதனை நான் நிறுத்துவதில்லை. வயதானதை பற்றி நான் கவலைப்படுவதில்லை. எனக்கு உண்மையாக இருப்பதில் அக்கறை காட்டுகிறேன்" என்றார்.
இவர் தனது இளமையான தோற்றத்தை தக்க வைப்பதற்காக உடற்பயிற்சி, தியானம் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவு ஆகியவற்றை உள்ளடக்கிய கடுமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்.
இதில், ஆபத்துகள் மற்றும் விமர்சனங்கள் இருந்தாலும் தான் தேர்ந்தெடுப்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |