இலங்கை அணி விஸ்வரூப வெற்றி! அரைசதம் விளாசிய ஹர்ஷிதா, கவிஷா
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டெர்க்சென் 61
கொழும்பில் நடந்த மகளிர் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 235 ஓட்டங்கள் எடுத்தது. அன்னெரி டெர்க்சென் 60 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் விளாசினார்.
மல்கி மதரா 4 விக்கெட்டுகளும், தேவ்மி விஹன்ஹா 3 விக்கெட்டுகளும், சுகந்திகா குமாரி மற்றும் இனோக ரணவீரா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இலங்கை வெற்றி
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் சமரி அதப்பத்து 6 ஓட்டங்களில் அவுட் ஆகி சொதப்பினார். ஆனாலும் விஷ்மி குணரத்னே 29 (35) ஓட்டங்களும், ஹாசினி பெரேரா 42 (55) ஓட்டங்களும் எடுத்தனர்.
அடுத்து ஹர்ஷிதா சமரவிக்ரமா (Harshitha Samarawickrama) மற்றும் கவிஷா தில்ஹாரி (Kavisha Dilhari) கூட்டணி அமைத்தனர்.
இந்தக் கூட்டணி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. அரைசதம் அடித்த கவிஷா தில்ஹாரி 75 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். வெற்றியை நெருங்கிய சமயத்தில் 77 (93) ஓட்டங்கள் எடுத்திருந்த ஹர்ஷிதா சமரவிக்ரமா அவுட் ஆனார்.
எனினும் இலங்கை அணி 46.3 ஓவரிலேயே 237 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |