பிரித்தானியாவில் இந்திய பெண் கத்தியால் குத்திப் படுகொலை! மூவர் அதிரடி கைது..லண்டனில் அதிர்ச்சி சம்பவம்
பிரித்தானியாவில் பெண்ணொருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண் படுகொலை
வடமேற்கு லண்டனில் உள்ள Wembley பகுதியில், நேற்றைய தினம் 27 வயது இந்திய பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், குறித்த பெண் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு 28 வயது பெண், கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது. உயிரிழந்த பெண் ஹைதராபாத்தைச் சேர்ந்த தேஜஸ்வினி என்றும், அவர் முதுகலைப் பட்டம் பெற லண்டன் சென்றுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும், நண்பர்களுடன் அவர் Wembley பகுதியில் தங்கியிருந்த நிலையில் பிரேசிலிய குடியிருப்பாளரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பெண் விடுவிப்பு
இந்த சம்பவம் தொடர்பில் மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களில் இருவர் 24 வயது ஆண் மற்றும் 23 வயது பெண் ஆவர். இவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே கைதாகினர். மூன்றாவது நபர் துப்பறியும் நபர்கள் மூலம் கைது செய்யப்பட்டார்.
கைதான 23 வயது பெண் மேலதிக நடவடிக்கையின்றி விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
காவல் ஆய்வாளர்
இச்சம்பவம் குறித்து துப்பறியும் தலைமை காவல் ஆய்வாளர் லிண்டா பிராட்லி கூறுகையில், 'இது வேகமாக நகரும் விசாரணை ஆகும். மேலும், எங்கள் வேண்டுகோளை ஏற்று இந்த நபரைப் பற்றிய தகவல்களைப் பகிரந்ததற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் சமூகத்தில் ஏற்படுத்திய குறிப்பிடத்தக்க கவலையை நான் உணர்கிறேன், என்ன நடந்தது என்பதை நிறுவுவதற்கு அர்ப்பணிப்புள்ள துப்பறியும் குழுவினர் பணியாற்றி வருகின்றனர் என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். உள்ளூர் அதிகாரிகள் அப்பகுதியில் இருப்பார்கள் ' என தெரிவித்துள்ளார்.
Getty Images/iStockphoto
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |