லண்டனில் பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்ட பெண் இவர்தான்: புகைப்படம் வெளியானது
லண்டனில், வியாழனன்று பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படம் முதலான விவரங்கள் வெளியாகியுள்ளன.
பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்ட பெண்
வியாழக்கிழமையன்று, காலை 11.50 மணியளவில், லண்டனிலுள்ள Burnt Oak என்னுமிடத்தில், பெண்ணொருவர் பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்டார். அவர் உதவி கோரி கதற, அக்கம்பக்கத்தினர் அவருக்கு உதவ ஓடியதுடன், பொலிசாருக்கும் தகவலளித்தனர்.
Credit: Met Police
சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த அவசர உதவிக்குழுவினர் அவருக்கு சிகிச்சையளித்தும் அவரை அவர்களால் காப்பாற்ற முடியாமல் போனது. அவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.
யார் அவர்?
Credit: © Nigel Howard / NIGEL HOWARD MEDIA
அந்தப் பெண்ணின் பெயர் அனிதா (Anita Mukhey, 66) என்றும், அவர் பிரித்தானிய மருத்துவ அமைப்பான NHSஇல் பகுதி நேரப் பணியாற்றிவந்தார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
Credit: © Nigel Howard / NIGEL HOWARD MEDIA
இதற்கிடையில், அனிதாவைக் கத்தியால் குத்திய நபரை சில மணி நேரங்களுக்குள் பொலிசார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் ஜலால் (Jalal Debella, 22). நாளை அவர் மீண்டும் Old Bailey நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார். அவர் எதற்காக அனிதாவைக் கத்தியால் குத்தினார் என்பது தெரியவில்லை.
Credit: PA
Credit: © Nigel Howard / NIGEL HOWARD MEDIA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |