ஒரே மாதத்தில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை! புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் பெற்றோர்கள்
திருச்சி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் திருமணம் நடந்து ஒரே மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மேல மேடு கிராமத்தில் வசித்து வந்தவர் மாலா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆணுக்கும் ஒரு மாதத்திற்கு முன் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
ஆனால் கணவன், மனைவி இடையே ஒத்துபோகததால் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இந்நிலையில் மாலா, கணவரிடம் கோபித்து கொண்டு தனது புகுந்த வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான மாலா வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அவரது பெற்றோர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது மாலா மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் மாலா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து இருவீட்டார்களையும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.