அணு ஆயுதப்போர் வெடிக்காது... ஆவிகளுடன் பேசும் பெண் கூறும் நல்ல செய்தி
ரஷ்ய ஜனாதிபதி புடினும் அவரது ஆதரவாளர்களும் அணுகுண்டு வீசிவிடுவோம் என அவ்வப்போது பயமுறுத்தும் செய்திகளை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால், அணு ஆயுதப்போர் வெடிக்காது என்கிறார் ஆவிகளுடன் பேசும் பெண் ஒருவர்.
ஆவிகளுடன் பேசும் பெண் கூறும் நல்ல செய்தி
எல்லோரும் அணு ஆயுதப்போர் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அணு ஆயுதப்போர் வெடிக்காது என்று கூறும் ஆவிகளுடன் பேசும் ரஷ்யப் பெண்ணான Galina Yanko என்பவர், கடவுள் மட்டுமே தண்டனைகளை அனுப்பமுடியும் என்றும் கடவுள் அதைச் செய்வார் என்றும் கூறியுள்ளார்.
உலகப்போர் ஒன்றைத் துவக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் அனைவரும் கஷ்டப்படுவார்கள் என்று கூறும் Galina, மக்கள் அதைக் குறித்துக் கவலைப்படவேண்டியதில்லை என்றும், நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகள் எப்போதும் உலகில் இருந்துகொண்டுதான் இருக்கும் என்றும், ஆனால், அணு ஆயுதப்போர் வெடிக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
Image: Anadolu via Getty Images
மாறும் அமெரிக்கத் தலைமை
அமெரிக்காவின் தலைமை மாறும் வரை, உலகின் பல பகுதிகளில் இவ்வித பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கும் என்று கூறும் Galina, இப்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருப்பவரின் பதவிக்காலம் முடிந்ததும், எல்லாமே தலைகீழாக மாறிவிடும் என்கிறார்.
Image: POOL/AFP via Getty Images
உக்ரைனிலும் எதிர்பாராத பயங்கர மாற்றங்கள் ஏற்படும் என்று கூறும் Galina, நாம் கொஞ்சம் காத்திருக்கவேண்டும், ரஷ்யாவைப் போர்க்களத்தில் தோற்கடிக்கமுடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்றும், அமெரிக்கத் தலைமை மாறியதும் ரஷ்யாவில் செழிப்பு ஏற்படும் என்றும், ரஷ்யா தலைமைத்துவம் பெறும் என்றும், ரஷ்யாவிடம் மோத மற்ற நாடுகள் பயப்படும் என்றும் ரஷ்யாவுக்கு உலக அரங்கில் மரியாதை ஏற்படும், எதிரிகள் ரஷ்யாவைக் குறித்து பயப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |