கணவனை பிரிந்து வாழ்ந்த ஆசிரியை..17 வயது மாணவருடன் காதலால் மாயம்..போக்ஸோவில் கைது
தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் ஆசிரியை ஒருவர், 17 வயது மாணவருடன் வீடு எடுத்து தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
ஆங்கில ஆசிரியை
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ஹெப்சிபா (28). ஆங்கில ஆசிரியையான இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், சென்னை தாழம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவருடன் ஹெப்சிபாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த மாணவருடன் அவர் மாயமாகியுள்ளார். மாணவன் காணாமல் போனதால் அவரது குடும்பத்தினர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.
iStock
போக்ஸோ வழக்கு
அதன் அடிப்படையில், பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டபோது கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆசிரியை மாணவருடன் இருந்தது தெரிய வந்துள்ளது.
பின்னர், கோவை காரமடையில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த ஹெப்சிபா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்ஸோ வழக்கு பாய்ந்துள்ளது.
இதற்கிடையில், மாணவருடன் பழக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை பள்ளி நிர்வாகம் 15 நாட்களுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Representational Image
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |